பனங்கிழங்கு வாழைப்பூ வடை

sl52699007520058 e1671353070433

தேவையான பொருட்கள்

பனங்கிழங்கு சுத்தம் செய்து நறுக்கியது – 2 கப்
கடலைப் பருப்பு – ஒரு கப்
வாழைப்பூ – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
அரிசி – 2 மேஜைக்கரண்டி
வெங்காயம் நறுக்கியது – அரை கப்
பெருங்காயம் – அரை சிட்டிகை
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி
கல் உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊறவைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்துவிடவும்.

முதலில் மிக்சியில் மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும். பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும்.

மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம். பிறகு வேகவைத்து சுத்தம் செய்த பனங்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அதனுடன் ஆய்ந்து வைத்த வாழைப்பூவை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும்.

கைகளை தண்ணீரில் நனைத்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை, வடையாக தட்டி பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் வேகவைத்தால்தான் உள்ளேவரை வேகும்.

#LifeStyle

Exit mobile version