AA1PVaJe
பொழுதுபோக்குசினிமா

நாளை உதய்பூரில் ரகசியத் திருமணம்? விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இணையப்போவதாகத் தகவல்!

Share

தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாளை (பெப்ரவரி 02) ராஜஸ்தானில் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

உதய்பூரில் பிரம்மாண்டமான திருமண அலங்காரப் பணிகள் நடைபெறுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் ரகசியமாக நடந்திருந்தது. ராஷ்மிகாவின் விரலில் மின்னிய வைர மோதிரம் மற்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் அளித்த மர்மமான பதில் ஆகியவை இதனை உறுதிப்படுத்தின.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது காதல் குறித்துப் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், வழக்கம் போலவே இந்தத் திருமணச் செய்தி குறித்தும் இரு நடிகர்களின் தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த ‘கியூட்’ ஜோடி ஒரு வழியாகத் தங்களது பந்தத்தை உறுதிப்படுத்துவார்களா என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...