நான் படாத கஷ்டமே கிடையாது – மனம் திறந்த நடிகை சாய் தன்ஷிகா; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

cinemaexpress 2024 12 03 28eqbmk9 sai dhanshika 444

சாய் தன்ஷிகா நடிப்பில் அண்மையில் வெளியான ‘யோகிடா’ (Yogida) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், அதிரடி சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்தபோது, எதிர்பாராத விதமாக பீர் பாட்டில் குத்தி அவரது கண்ணுக்குக் கீழ் காயம் ஏற்பட்டது. உயிரைப் பணையம் வைத்து அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர் மீது ரசிகர்களுக்கு இருந்த மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது.

திரையில் பார்க்கும்போது மிகவும் துணிச்சலான (Bold) பெண்ணாகத் தெரியும் சாய் தன்ஷிகா, நிஜ வாழ்க்கையில் தான் ஒரு எமோஷனலான நபர் என்று கூறியுள்ளார்.

எல்லோரும் என்னை போல்ட் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அடிக்கடி கண்ணீர் விடும் ஆள். வாழ்வில் நான் படாத கஷ்டமே கிடையாது, என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதை ஒரு பெரிய ஆசீர்வாதமாக அவர் கருதுகிறார்.

நடிகையாக ஜொலிக்கும் தன்ஷிகாவுக்குத் திரைப்படம் இயக்கும் கனவு ஒன்றும் உள்ளது. இது குறித்துப் பேசிய அவர், “இயக்கம் என்பது சாதாரண காரியம் அல்ல. ஒரு உதவியாளராக இருந்து முறையாகக் கற்றுக் கொண்ட பின்னரே படம் இயக்க வேண்டும். அது ஒரு ஜோக் கிடையாது, அதைச் செய்ய நான் விரும்புகிறேன்,” என்று தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஷாலின் வருங்கால மனைவி என்று குறிப்பிடப்படும் சாய் தன்ஷிகாவின் இந்த நேர்காணலைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். “கஷ்டங்களைத் தாண்டியும் நீங்கள் காட்டும் தைரியம் சாதாரண விஷயம் அல்ல” என ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

 

Exit mobile version