தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமான நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தில் நடிக்கக் கமிட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குகிறார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காகச் சாய் பல்லவிக்கு ரூ. 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாய் பல்லவி ‘கஸ்தூரிமான்’ படம் மூலமாகத் தமிழ்ச் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், சில படங்களில் நாயகி தோழியாகவே நடித்து வந்தார்.
மலையாளப் படமான ‘பிரேமம்’ அவருக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் லிஸ்டில் அவர் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ‘அமரன்’ படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.