தலைமுடி உதிர்கிறதா? – கவலைய விடுங்க

hair loss

தலைமுடி உதிர்கிறதா? – கவலைய விடுங்க

இன்றைய கால ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் மிகப் பெருமளவில் எதிர்நோக்கும் பிரச்சினை என்றால் அது தலைமுடி உதிர்வு பிரச்சினை தான். இதனைத் தீர்ப்பதற்கு, இலகுவாக வீட்டிலேயே பெறக்கூடிய இயற்கை வழிகள் சில உங்களுக்காக.

நெல்லிக்காய்

nelli

நெல்லிக்காயை நன்கு காய வைத்து, தூளாக்கி தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளுங்கள். இதனை தினமும் தலைக்கு பூசி வர முடி உதிர்வது முற்றாக நீங்கும். உதிர்ந்த முடியும் முளைக்கும்.

 

 

 

தேங்காய்

தினமும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பது தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும். வாரம் ஒருமுறை தேங்காய் பூவை நன்கு அரைத்து தலைக்கு தடவி அரைமணி நேரம் ஊற வைத்து கழுவுங்கள். தலைமுடி உதிர்வது நிற்கும்.

 

 

எலுமிச்சை

 

 

பாதி எலும்பிச்சை சாறு எடுத்து அதனை தயிருடன் கலந்து தலையில் தடவி, 30 நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து தலையைக் கழுவுங்கள். இதனால் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தலைமுடி உதிர்வும் நிற்கும்.

 

 

 

 

ஒலிவ் ஒயில்

 

இரண்டு மேசைக் கரண்டி ஒலிவ் ஒயில் மற்றும் இரண்டு மேசைக் கரண்டி தேன் எடுத்து அதனுடன் இலவங்கப்பட்டைத் தூள் சேர்த்து பசையாகக் கலந்துகொள்ளுங்கள். இக் கலவையை தலையில் தொடர்ச்சியாக பூசி வர முடி உதிர்வது நிற்கும். முடியும் மிருதுவாகும்.

 

 

 

கற்றாழை

 

 

வாரத்தில் இரண்டு முறை கற்றாழை ஜெல் எடுத்து தலைமுடிக்கு பூசி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். இதனால் முடிக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், தலைமுடி உதிர்வு கட்டுப்படுவதுடன் முடி வளர்ச்சியும் கூடும். தலைக்கு வைக்கும் எண்ணெயுடனும் கற்றாழை சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்.

 

 

 

 

கடுகு எண்ணெய்

 

ஒரு கப் கடுகு எண்ணையுடன், மருதாணி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தலைமுடிக்கு பூசி வர தலைமுடி உதிர்வு நிற்கும்.

 

 

 

வெந்தயம்

 

ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து தலைமுடியில் தடவி, 45 நிமிடம் கழித்து தண்ணீரில் தலைமுடியை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவர தலைமுடி உதிர்வு, பொடுகு தடுக்கப்படும்.

 

 

 

பசளிக் கீரை

 

 

தினமும் உணவில் பசளிக் கீரையை சேர்த்து வர தலைமுடி உதிர்வை தடுக்கலாம்.

 

 

 

கொத்தமல்லி

 

கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து வர தலைமுடி உதிர்வு நிற்பதுடன், தலைமுடி வளர்ச்சியடையும். கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர தலைமுடி உதிர்வு தடைப்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Exit mobile version