சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அதிகாரப்பூர்வமான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு சில தினங்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 10-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான Dawn Pictures அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ரவி மோகன் (ஜெயம் ரவி), ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே (ஜனவரி 10) சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ வெளியாகிறது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை திரைக்களம் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இடையிலான சுவாரசியமான போட்டியாக அமையவுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.