தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் (Censor Board) சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போனது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான KVN உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இன்று (ஜனவரி 15) வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்:
சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. ‘ஜனநாயகன்’ வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வருகிற ஜனவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகுமா அல்லது கூடுதல் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

