புல்லட்டுடன் மீனாட்சி – லைக்குகளைக் குவிக்கும் லேட்டஸ் படங்கள்
விஜய் ரீவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து மிகப் பிரபலமானவர் நடிகை ரக்சிதா.
தனது நடிப்பாலும் அழகாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனவசம் இழுத்து வைத்திருப்பவர் ரக்சிதா. தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில், செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஒரு சில படங்களில் சிறிய காட்சிகளிலும், பல விளம்பர படங்களிலும் தோன்றியுள்ளார். தற்போது கன்னட படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ரக்சிதா புல்லட் பைக்குடன் நடத்திய போட்டோசூட் புகைப்படங்களை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “வலி என்பது பெண்ணை போர்வீரராக மாற்றும்” என்பதை கேப்ஷனாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்டுகளையும் அள்ளிக்குவித்து வருவதுடன், இணையத்தளங்களில் புகைப்படங்களை வைரலாக்கியும் வருகின்றனர்.