டோனியிடமிருந்து ‘பேட்’ – நன்றி தெரிவித்த யோகிபாபு

1836802 yo

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு,

தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை நாயகி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு யோகிபாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

Exit mobile version