குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய சுவையான முட்டை பஜ்ஜி இலகுவாக எப்படி தயாரிப்பதென பார்ப்போம்.
தேவையானவை
முட்டை – 6
கடலை மா – 2 கப்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி,வெ.பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி
அப்பச்சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முட்டையை அவித்து கோது உடைத்து உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு பெரிய கோப்பையில் கடலை மாவுடன் எண்ணெய் தவிர மற்றைய எல்லாப் பொருள்களையும் போட்டு அளவான நீர் ஊற்றி கெட்டியாக நன்கு கலந்து வையுங்கள்.
அரை மணி நேரம் கழித்து சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டைகளை ஒவ்வொன்றாக கடலைமா கலவையில் தோய்த்து மஞ்சட் கரு வெளியே வராதபடி எண்ணெயில் மெதுவாக போட்டு பஜ்ஜியாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் சூடாக பரிமாறுங்கள்.