எந்த சோப்பும் தேவையில்லை – சருமத்தை பளபளப்பாக்க இந்த பொடி போதும்

beauty

நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான சரும தங்க குளியல் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. முக்கியமாக பருக்கள், தழும்பு, கரும்புள்ளி போன்ற எந்த விதமான தோல் அலர்ஜியையும் குணப்படுத்தும்.

செய்முறை

ரோஜா பூ – 1 கப்
ஆவாரம் பூ – 1 கப்
பச்சை பயறு – அரை கப்
கஸ்தூரி மஞ்சள்- அரை கப்
பூலான் கிழங்கு பொடி – 2 டீஸ்பூன்

மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.

இப்போது அருமையான தங்க குளியல் பொடி தயார்… இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்..

மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..

பயன்படுத்தும் முறை

இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.

ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்…

#Beauty

Exit mobile version