இன்றைய ராசிபலன் (20.04.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 6

Medam

எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறு ஏற்படும். அஷ்டம சந்திரன் உங்களுக்கு கஷ்டத்தை கொடுப்பதில் ஆச்சரியமில்லை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள்.

ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் போகும்போது கவனமாக இருக்க வேண்டும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

 

Edapam

 

வெளிநாட்டு செய்திகள் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும்.

தொழிலில் உருவாகும் போட்டிகளை சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவார்கள்.

வெற்றிகரமாக வெளியூர் பயணங்கள் அமையும். பண நெருக்கடி தீர்ந்து மனநிம்மதி ஏற்படும்.

 

Mithunam

 

விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். பணியாளர்கள் ஊக்கத்துடன் வேலை பார்ப்பார்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கு உயரும்.

 

Kadakam

 

நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்தும். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி கிடைக்கும்.

தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவார்கள். வீண் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.

 

Simmam

முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகள் திறக்கும். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவார்கள்.

பணியாளர்கள் கனிவுடன் கவனிக்கப்படுவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டு, வேலையில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும்.

வேலைக்காக புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும்.

 

Kanni

ஆடை ஆபரணங்கள் வாங்கி மனைவி மக்களை அசத்துவீர்கள். புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள்.

உறவினர்கள் மனம் உவந்து உதவி செய்வார்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கிடைக்கும். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கணவனின் மனம் கோணாமல் மனைவியும் மனைவியின் மனம் சுருங்காமல் கணவனும் நடந்துகொள்வார்கள்.

 

Thulaam

 

செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அனைவரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். நண்பரின் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். அரசாங்க வேலைகள் அனுசரணையாக நடக்கும்.

வேலைக்காக காத்திருப்பவர்களின் கனவு நனவாகும். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள்.

சிறு,குறு வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

Viruchchikam

வளர்பிறை சந்திரன் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். பணியாளர்கள் டென்ஷனாக இருப்பார்கள்.

வீட்டில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தொழில்கள் சுமாராக நடக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும்.

அலைச்சல் மிகுதியால் தூக்கம் கெடும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். ஞாபக மறதி அதிகரிக்கும்.

 

Thanusu

 

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருங்கள்.

சிறு விபத்துக்களை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். உறவினர்களும் உங்களுக்கு உதவும் எண்ணத்தில் இருப்பார்கள்.

கடமைக்காக வேலை செய்யாதீர்கள். பண இழப்பை தவிர்க்க பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

 

Magaram

நீண்டகால திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள்.

தொழில் முன்னேற்ற பாதையில் நடக்கும். பொருட்கள் விற்பனையால் வியாபாரிகள் புது உற்சாகம் அடைவார்கள்.

நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நடத்தையால் பெருமை கொள்ள வைப்பார்கள்.

 

 

Kumbam

கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணம் தாராளமாக புழங்கும்.

சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். வேலைத் திறமையால் பணியாளர்களின் மதிப்பு உயரும்.

எதிரிகள் முனை மழுங்கி ஓடுவார்கள். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.

 

Meenam

எதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. கெட்டபெயர் வாங்காமல் கெட்டிக்காரத்தனமாக செயல்படுங்கள். வேலை காரணமாக அலைபவர்கள் வேளை தவறாமல் சாப்பிடுங்கள்.

இல்லையென்றால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். நல்லது செய்தால் கூட தீங்கு தான் திரும்ப வரும்.

நட்பும் விரோதமாக மாறும். இயந்திரங்களில் வேலை பார்ப்பார்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 

 

.#Astrology

Exit mobile version