இன்றைய ராசிபலன் (29.04.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 10

Medam

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

 

Edapam

 

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.

வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அம்பிகை வழிபாடு நன்று.

 

Mithunam

 

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தேவை யான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். விநாயகரை வழிபடுவது நலம் தரும்.

 

Kadakam

 

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.

 

Simmam

 

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது.

மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தந்தையின் உடல்நலனில் கவ னம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

 

Kanni

 

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.

உறவினர்கள் வகையில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

 

Thulaam

 

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

 

 

Viruchchikam

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு வருத்தம் தரும்.

குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

Thanusu

 

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.

ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமான் வழிபாடு நலம் தரும்.

Magaram

 

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள்.

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.

வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். இளைய சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பொறுமை அவசியம். ஆஞ்சநேயர் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

 

Kumbam

 

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும்.

சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

 

Meenam

 

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.

வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

 

#Astrology

Exit mobile version