ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (27.04.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 9
Share

Medam

medam

உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். குடும்ப பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சந்தை நிலவரங்கள் உங்களுக்கு எதிராக திரும்பும். பங்குச்சந்தை வியாபாரம் சாதகமாக இல்லை.

ஏற்றுமதித் துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறையால் மனக்கவலை தோன்றும்.

 

Edapam

edapam

 

வீண் செலவுகள் குறைந்து நிதிநிலைமை சீர்படும். உடல் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.

திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமையும். விற்பனையில் அதிசயத்தக்க முன்னேற்றம் காணப்படும்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.அரசியல் செல்வாக்குள்ள ஒருவரின் தொடர்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

 

Mithunam

mithunam

 

மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்குவீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சீராக நடக்கும்.

ஷேர் மார்க்கெட்டிலும் உங்கள் கை ஓங்கும். அலைச்சலும் அதிகம் இருக்கும் ஆதாயமும் அதிகம் கிடைக்கும்‌.

வேலை திறனால் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும்.

 

Kadakam

kadakam 1

 

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கெட்ட பெயர்களை சம்பாதிக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பணம் நகைகள் வைக்கும் இடத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை.

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

Simmam

simmam

 

வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாக செலவு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் அவ்வளவு சாதகமாக அமையாது. கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகும்.

வங்கி பரிவர்த்தனையில் சுணக்கம் ஏற்படும். உறவினர்களால் செலவு அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவமனை செல்வீர்கள்.

பெற்றோர் வகையில் பணம் விரையம் ஏற்படும். வேலை இடங்களிலும் சிக்கலை சந்திப்பீர்கள்.

 

Kanni

kanni

 

வருமானம் போதிய அளவுக்கு இருக்கும். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை.

உற்பத்தி அதிகரித்து உற்சாகமடைவீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அனுகூலம் அடைவார்கள்.

 

Thulaam

thulaam

 

வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பணவரவு இருக்கும்.

தங்கம் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபார உத்திகளால் லாபத்தைக் காண்பீர்கள்.

குடும்பப் பிரச்சனைகளால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்.

 

 

Viruchchikam

viruchchikam

அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த காலத்தில் நன்கு உணர்வீர்கள். ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலுக்கு இடையூறை ஏற்படுத்தும்.

பூர்வீக சொத்துக்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். கொடுத்த வாக்குறுதியை சிரமப்பட்டு காப்பாற்றுவீர்கள்.

சங்கடங்களுக்கு இடையில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

Thanusu

thanusu

 

புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். எந்த பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்.

குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கடந்தகால நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

 

Magaram

magaram

 

வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தடையின்றிப் பெறுவீர்கள். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பார்கள்.

வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். தொழிலில் தடை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக விலக்குவீர்கள்.

கணவன் மனைவி இருவரும் அனுசரித்துப் போவது அவசியம்.

 

 

Kumbam

kumbam

 

வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமணத்திற்கான வரன்கள் தேடிவரும். நண்பர்களின் ஆலோசனை தொழிலுக்கு உதவியாக இருக்கும். பணம் தாராளமாக புழங்கும்.

சகோதர வழிகளில் ஆதாயம் பெறுவீர்கள். உடல்நிலை சற்று சோர்வாக காணப்படும். பிள்ளைகளால் பிரச்சினைகள் வந்து விலகும்.

 

Meenam

meenam

 

தொழில் முன்னேற்றம் தொய்வான நிலையில் இருக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் மிகவும் குறைவு. கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வு முக்கியம்.

கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியம். அரசுப் பணியாளர்கள் டென்ஷனாகவே இருப்பார்கள்‌

சக தொழிலாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். போட்டி பந்தயங்கள் பயன் தராது.

 

.#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...