15563919 rasipalan
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 26.10.2025

Share

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.

ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.46 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். இரவு நேர பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.

கடகம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.

துலாம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகப் பலன் கிட்டும்.

விருச்சிகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபார ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

Share
தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...