Medam

பற்றாக்குறை இல்லாத பணவரவு இருக்கும். கணினி துறையில் வேலை செய்பவர்கள் கணிசமான பலன்களைப் பெறுவார்கள். வாகனம் வாங்கி வருபவர்களுக்கு யோகமான காலகட்டம்.
நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் சுபச் செய்திகள் வீடு தேடி வரும் கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும் .கடிதங்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
அலங்காரமாக உடை உடுத்துவதில் விருப்பம் கொள்வீர்கள். கவலைகள் மறந்து போகும். கடன்கள் குறைந்து போகும்.வேலை பார்ப்போர் மனநிறைவுடன் இருப்பார்கள். உறவுகளால் செலவுகள் ஏற்படும்.
Edapam

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு திடீர் ஏற்றம் ஏற்படும். உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டி மகிழ்வார்கள்.
ஆடம்பரச் செயல்களால் அதிகம் செலவு செய்வீர்கள். புகழும் செல்வாக்கும் தேடிவரும். பந்தயம் சூதாட்டங்கள் பலன் தராது.
Mithunam

உடலுக்கு ஏதாவது வந்து படுத்தி எடுக்கும். நல்ல மருத்துவரை பார்ப்பது சிறப்பு. குடும்பத்தில் வாய் துடுக்காக பேசவேண்டாம். அது மன நிம்மதியை கெடுத்து விடும்.
வியாபாரம் சுமாராக நடக்கும். எதைத் தொட்டாலும் பிரச்சனை. என்ன காரணம் என்று திகைக்கிறீர்களா. ஜென்ம சந்திரன் செய்யும் சிக்கல்தான். வளர்பிறை சந்திரன் அந்த வாட்டத்தை போக்குவார்.
Kadakam

பொறுப்பாக வேலை பார்த்தாலும் சிறப்பாக இல்லையே. மேலதிகாரிகளின் சீற்றம் உங்களை இவ்வாறு சிந்திக்க வைக்கும். திடீர் செலவுகளால் பணத்தட்டுப்பாடு உருவாகும்.
தக்க சமயத்தில் உறவினர்களின் ஒத்தாசை கிடைக்கும். வழக்குகள் இழுபறியாக நடக்கும். வாகனங்கள் ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள்.
Simmam

வெளியூர் பயணங்களால் அடிக்கப் போகிறது உங்களுக்கு யோகம். மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் மனதைக் குளிரவைக்கும்.
மக்கள் பணியில் அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.
உபரி பாகங்கள் விற்பனையின் மூலம் நல்ல லாபம். தொழிலாளர்களுக்கு உற்சாகமான நாள். பங்கு முதலீடு அதிக லாபம் தரும்.
Kanni

பொருள் சேர்க்கையால் பெண்கள் பூரித்துப் போவார்கள். குளிர்பான வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.
பொழுதுபோக்கு காரியங்களில் பணம் செலவு செய்வீர்கள். அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.
ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு யோகமான நாள். வாகனம் வாங்கி விற்பவர்கள் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள்.
Thulaam

திருமணமே வேண்டாம் என்று சொன்ன பெண் மணவாழ்க்கைக்கு சம்மதிப்பார். சிலர் வீடுகளில் இது கண்டிப்பாக நடக்கும்.
உங்களுக்கு கெடுதல் விளைவிக்க விரோதிகள் முனைப்போடு செயல்படுவார்கள். அதை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள்.
உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள்.போட்டி பந்தயங்கள் லாபம் தராது.
Viruchchikam

உங்கள் ராசிக்கு இது சந்திராஷ்டம நேரம். பணத்தை பத்திரமான இடத்தில் வையுங்கள்.
எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். வாகனங்களில் போகும்போது செல்போனில் பேசாதீர்கள். புதிய முயற்சிகளில் இறங்காமல் இருப்பது நல்லது.
தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டாம். வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்விவேகத்தைக் கூட்டி கொள்ளுங்கள் இல்லை என்றால் சில இடர்ப்பாடுகளை சந்திக்க நிலை உருவாகும்.
நாணயத்தைக் காப்பாற்றி பாடுபடுவீர்கள் அவசிய செலவுக்கும் கடன் வாங்க நேரிடும் தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
Thanusu

இல்லத்தில் மகிழ்ச்சி பெருகி ஆறாக ஓடும். மனைவி உங்களை பாராட்டி மகிழ்வார். பிள்ளைகளின் மனதுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்வீர்கள்.
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் எதிர்பார்த்த பலனை தரும்.
கம்ப்யூட்டர் தொழில் கணிசமான லாபத்தை கொடுக்கும் .நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்றமான காலம்.
Maharam

சந்திரன் ஆறாமிடத்தில் பயணிக்கிறார். சின்ன சின்ன சங்கடங்களை ஏற்படுத்த தவறமாட்டார்.
இருப்பினும் தொழில்துறையில் நல்ல லாபம் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்களாலும் ஆதாயம் உண்டாகும்.
ஆடம்பரமான காரியங்கள் அதிக செலவை உண்டு பண்ணும் அரசியலில் உள்ளவர்கள் வாய்ப் பேச்சில் கவனம் தேவை.
Kumbam

மனக் கவலையால் தூக்கம் கெடும். வேலை இடங்களில் வீண் பழிகளை சந்திக்க நேரும்.
பிள்ளைகள் ஏதாவது பிரச்சனையை கொண்டு வருவார்கள் .தொழில்துறை ஏற்ற இறக்கம் இல்லாமல் சீராக நடக்கும்.
வியாபாரிகள் அதிக லாபம் பெற இயலாது. கல்லூரி மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவிலும் சற்று குழப்பமாகத்தான் இருக்கும்.
Meenam

வழக்குகள் வெற்றி தரும் /வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் அது சாத்தியம்.
பெண்களுக்கு யோகம் நகைகள் வாங்கி குவிக்கப் போகிறார்கள் .பிள்ளைகள் பிடித்தமான உடைகள் அணிந்து மகிழ்வார்கள் .
பொருளாதார முன்னேற்றம் பூரிப்படைய வைக்கும் .வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் .
பங்கு பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும் விருந்தினர்களின் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்
#Astrology
Leave a comment