Medam
இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்வோர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்நியோன்னியமாக இருப்பார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாது போகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.
Edapam
நண்பர்கள் வருகையால் இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுமூகமான சூழல் ஏற்படும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். மா எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
Mithunam
சிறந்த நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல விருத்தி ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கு வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள்.
பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகர மாக முடியும். பொருளாதாரப் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
Kadakam
கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். பணியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.
Simmam
குடும்ப உறுப்பினர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு. அமைதியை கடைப்பிடித்தல் அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதலான கவனம் தேவை.
Kanni
இன்று உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு அதிகரிக்கும். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வார்த்தையில் நிதானம் தேவை.
பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
Thulaam
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
குடும்பத்தில் உள்ள பெரியார்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வீர்கள். பணியிடத்தில் கடின உழைப்பு வெற்றியைக் கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முருகப்பெருமான் வழிபாடு மனதுக்கு அமைதியை உண்டாக்கும்.
Viruchchikam
இந்த நாள் இனிய நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாளாக அமையும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்வியில் மாணவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
Thanusu
பணியாளர்கள் பணியில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பணம் வரும். உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.
Magaram
கணவன் – மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். இன்றைய நாள் ஆதாயம் தருவதாக அமையும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான லாபம் கிடைக்கும். பணிச்சுமையை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.
Kumbam
உத்தியோகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நிம்மதியான நாளாக இருக்கும். கணவன் – மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயற்பாடுகளில் கவனம் தேவை. சுபகாரியங்களில் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
Meenam
கூடுதல் முயற்சி மாணவர்களின் கல்வி நிலை மேம்பாட்டுக்கு உதவும். பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலையை திறம்படவும், வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு, நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் ஏற்படும் பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள்.
Leave a comment