Medam

வாகனங்களைச் செலுத்தும் போது இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருங்கள். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
கடன் கொடுக்கும்போது எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடும்.
வெளியூர்ப் பயணங்களின்போது பொருட்கள் கவனம். சந்திராஷ்டம நாள். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடஙகள்.
Edapam

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த வழக்கு முடிவுக்கு வரும்.
நோய் பற்றிய கற்பனையால் கவலைப்பட்ட உங்களுக்கு தெளிவு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உண்டு.
திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்காக எதிர்பார்த்த பணம் வங்கியில் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.
Mithunam

பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் விரிசல் உண்டாகும்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கத் தாமதமாகும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள். சட்டச் சிக்கலில் மாட்டி சங்கடப்படுவீர்கள்.
Kadakam

நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகம் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
பங்குப் பரிவர்த்தனைத் தொழில் ஏற்றமாக இருக்கும். நிலம் வாங்கி விற்பது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
அந்தஸ்தை அதிகரித்துக்கொள்ள ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த வில்லங்கம் விலகி உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும்.
simmam

கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காட வைக்கும்.
புதிய தொழில் தொடங்குவீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள்.
ஐடி தொழிலில் அற்புதமான லாபம் பார்ப்பீர்கள். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்த்து பாராட்டுப் பெறுவீர்கள்.
Kanni

உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறும். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு நடங்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.
பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள். காரியத் தடைகள் வந்தாலும் கவலைப்படாதீர்கள். கடின உழைப்பு உங்களுக்குக் கை கொடுக்கும்.
Thulaam

போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்புக் கிடைக்கும்.
பங்குச்சந்தை வியாபாரம் ஏற்ற நிலையில் இருக்கும். நிலத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் பன்மடங்கு பெருகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணம் தாராளமாகப் புழங்கும்
Viruchchikam

கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள்.
நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதமாகும். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராது.
ஊழியர்கள் உற்பத்தியைப் பெருக்க கடுமையாக உழைக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
Thanusu

உடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள்.
நெருக்கு வட்டத்தில் வந்த திருமணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவார்கள்.
ஐடி துறையில் தூக்கத்தைக் கெடுத்து வேலை பார்ப்பீர்கள். மன நிம்மதி குறையும்.
Maharam

நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகை தக்க சமயத்தில் உதவும். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்.
தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வந்துசேரும்.
குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு இடையூறு செய்யாமல் இருப்பார்கள்.
Kumbam

ஆன்லைன் வர்த்தகங்கள் லாபத்தை அள்ளித் தரும். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள்.
அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்கள் தடையின்றி வரும்.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அனுகூலத்தைத் தரும்.
Meenam

இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானம் அதிகரிக்கும்.
அரசு வகையில் வரவேண்டிய தொகைகள் கைக்கு வந்து சேரும். சிலருக்கு வங்கியிலிருந்து நிதி உதவி கிடைக்கும்.
வரவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு உயரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். அரசுப் பணியாளர்கள் இடமாறுதல் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.
#Astrology
Leave a comment