Medam
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.
Edapam
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். இன்று திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும். வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும்.
குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
Mithunam
இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும்.
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
Kadakam
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.
எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
நிதி நெருக்கடிகள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
Simmam
பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும்.
பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும்.
Kanni
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு.
நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் லாபம் உண்டாகும்.
கல்யாண யோகம் கை கூடி வந்துள்ளது.
Thulaam
அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பண வருமானமும் சேமிப்பும் உயரும்.
Viruchchikam
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் ஏற்பட்ட வீண் மனஸ்தாபாங்கள் நீங்கும்.
தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும்.
Thanusu
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.
Maharam
வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
Kumbam
வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும்.
Meenam
பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
#Astrology

