இன்றைய ராசிபலன் (14.03.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 4

Medam

உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும்.

வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம்.

 

Edapam

வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

 

 

Mithunam

வருமானம் பெருகும். லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும்.

திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

 

 

Kadakam

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

 

Simmam

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும்.

பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

 

 

Kanni

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

 

 

Thulaam

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும்.

 

Viruchchikam

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும்.

 

Thanusu

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சை குறைப்பது உத்தமம்.

Magaram

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

 

 

 

Kumbam

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

 

Meenam

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும்.

பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தைத் தரும்.

.#Astrology

Exit mobile version