Medam
இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். புத்திக்கூர்மையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் விடுமுறை நாட்களை செலவு செய்வீர்கள். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.
தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
Edapam
பணவரவு அதிகரிக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு தேடி நல்ல செய்தி தேடி வரும்.
Mithunam
மனதில் அமைதி குறையும் என்றாலும் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும்.
அரசு தொடர்பான காரியங்களில் வீண் விரயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
Kadakam
தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும்
Simmam
உற்சாகம் கூடும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள், வாய்ப்புகள் உண்டாகும்.
பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றுவதன் மூலம் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் லாபம் அதிகரிக்கும்.
Kanni
தொழில் வியாபாரத்தில் உற்சாகம் கூடும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
திட்டமிட்ட முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும்.
Thulaam
அப்பா வழியில் பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும்.
உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும்.
Viruchchikam
இன்று பிற்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்வும். எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும்.
பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்கள் இன்றைக்கு வேண்டாம்.
Thanusu
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும்.
செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சந்திரன் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று.
Magaram
உடல் நலத்தில் அக்கறை தேவை. திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும்.
புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்துவிடுவீர்கள்.
கணவன் மனைவி இடையேயான பேச்சில் உற்சாகம் பிறக்கும்.
Kumbam
பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்.
சாமர்த்தியமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
Meenam
குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வரலாம்.
.#Astrology

