WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 6
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (11.05.2022)

Share

Medam

medam

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலை நீங்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.

 

Edapam

edapam

எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் தடையின்றி கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாகும்.

கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். மலர் வணிகம் செய்பவர்கள் மகத்தான பலன் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

                                                                                                                                   

 

                                                                                                                                   Mithunam

mithunam

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.

வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண வரவுகளை பக்குவமாகக் கையாளுங்கள்.

வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்லுங்கள். கால்நடை வளர்ப்பில் கண்டிப்பாக லாபம் கிடைக்கும். போட்டி பந்தயங்கள் பயன் தராது.

                                                                                                                        Kadakam

kadakam

 

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழில் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி பெருகும். கடல் கடந்து தொழில் செய்வோருக்கு இடையூறுகள் விலகும்.

ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்குவார்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.

 

                                                                                                                   simmam

 

simmam

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.

கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்க வேண்டாம். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்கலாம்.

ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள். ஆடிட்டர்கள் தொழிலில் ஆதாயமடைவார்கள்.

 

                                                                                                            Kanni

kanni

நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையே காணப்படும். ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக நடக்கும். பங்குப் பரிவர்த்தனையில் ஆலோசித்து முதலீடு செய்யுங்கள்.

 

 

                                                                                         Thulaam

thulaam

உங்கள் கையில் பணம் தாராளமாக நடமாடும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பார்கள்.

பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். மனைவி மக்கள் மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்கள்.

                                                                                                                               

                                                                                                            Viruchchikam

viruchchikam

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் நாள் இது. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும்.

குடும்ப நலனுக்காக பெண்கள் சேமிப்பைத் தருவார்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும்.

முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து மனதிற்கு நிறைவைக் கொடுக்கும். பொறுப்புடன் செயல்படுவீர்கள்.

 

Thanusu

thanusu

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள்.

வேலையாட்களின் உதவி யால் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். அக்கறையாக வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

 

Maharam

magaram

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள்.

ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள்.

இல்லையெனில் அவமானங்களைச் சந்திக்க நேரும். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள்.

Kumbam

kumbam

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

அரசாங்கப் பதவிகள் தேடி வரும். கட்டிடத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பெருகும்.

வொர்க் ஷாப் வைத்திருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

Meenam

meenam

நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள்.

அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 3
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 மே 2025 : சரஸ்வதி யோகத்தால் செயல்பாடுகள் சிறக்கும் ராசிகள்

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்....

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 22 மே 2025 : Daily Rasi Palan

இன்றைய ராசிபலன் 22.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம்...

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21 மே 2025 – இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை

இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம்...