Medam
வாக்கினால் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும்.
அலுவலகங்களில் உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
Edapam
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் கைகூடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
Mithunam
சுப காரியங்கள் நடைபெறுவதால் சுப விரைய செலவுகளும் உண்டாகும். பெண்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
தொழில் ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
Kadakam
இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் அதிகரிக்கும். செலவில் சிக்கனம் தேவை. நண்பர்கள் மூலம் பணஉதவிகள் கிடைக்கும்.
Simmam
உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
கடன்கள் குறையும். இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.
மன நிம்மதி அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபத்தை தரும்.
Kanni
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
Thulaam
உங்கள் ராசிக்கு மாலை 05.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் வேகத்தை குறைத்து நிதானமாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.
எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.
இரவுக்கு மேல் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும்.
Viruchchikam
உங்கள் ராசிக்கு மாலை 05.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
உடல்நிலையில் கவனம் தேவை. அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
Thanusu
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.
சந்திர மங்கள யோகம், உண்டாகிறது. தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.
Maharam
பண நெருக்கடிகள் நீங்கும். கடன் உதவி தாராளமாக கிடைக்கும். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
Kumbam
உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். மனதளவில் உற்சாகம் கூடும்.
இன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் வந்து நீங்கும்.
Meenam
இன்று வீட்டின் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.
பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு ஆலய தரிசனம் செல்வீர்கள்.
ஆன்மீக பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
#Astrology

