Medam

வேடிக்கையாகப் பேசி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை நண்பர்கள் செய்வார்கள்.
இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமாக கால் வையுங்கள்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள். போட்டி பந்தயங்களில் விலகியிருங்கள். பணவரவில் தடை ஏற்படும்.
Edapam

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். பெட்டிக் கடை, டீக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.
சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்வீர்கள்.
Mithunam

ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். தொழிலுக்குப் போட்டியாக இருந்தவர்களை வீழ்த்துவீர்கள்.
இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். இதனால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து தொழிலுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.
மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதில் முனைப்புக் காட்டுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள்.
Kadakam

விருந்து நிகழ்ச்சிகளுக்காக கணிசமான காசு செலவழிப்பீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள்.
குடும்பத்தில் வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கும். தாய் மாமன் வழியில் நன்மைகள் கிடைக்கும்.
அக்கறையாக வேலைபார்த்து முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உறவுகளுக்குள் சிறிய மனக்கசப்பு உருவாகலாம். தொழிலை விரிவுபடுத்த அரசாங்க உதவி கிடைக்கும்
simmam

மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள். ஆனால் அது பொல்லாப்பில் போய் முடியும். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் உண்டாகும்.
வியாபாரத்தில் சிக்கல்கள் தோன்றி மறையும். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலை சுணக்கம் ஆகும்.
நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரிப்பார்கள். விடை காண முடியாத கேள்விக்கு இன்று தெளிவு பிறக்கும்.
Kanni

இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி உதவி செய்வார். சேர்த்து வைத்திருந்த பணம் உரிய நேரத்தில் பயன்படும்.
எல்ஐசி துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.
அரசாங்க உதவி தாராளமாகக் கிடைக்கும். டெய்லர்கள் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
Thulaam

தள்ளாட்டமாக இருந்த தொழிலை நிலை நிறுத்துவீர்கள். கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும்.
புதிய நட்புகளால் நல்லது நடக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
Viruchchikam

உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள். டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசாதீர்கள்.
மோட்டார் சாதனங்களில் எதிர்பாராத பழுது ஏற்படும். அரசாங்க வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அக்கறையோடு வேலை பார்த்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. வெளிநாட்டுப் பண உதவியில் தடங்கல் ஏற்படும். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
Thanusu

கடந்த காலத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும்.
நல்ல நேரத்தில் நண்பர்கள் பண உதவி செய்வார்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். அனாதை இல்லங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
Maharam

நீங்கள் உதவி செய்தவர்கள் உங்களுக்கு உதவி செய்யத் தயங்குவார்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள்.
எடுக்கும் செயல்களில் எதிர்மறையான பலன் கிடைத்து மனதை வேதனைப்படுத்தும். குடும்பத்தில் தேவையில்லாத விவகாரங்கள் தலைதூக்கும்.
அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதை அறவே நிறுத்துங்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.
Kumbam

குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பங்கு பரிவர்த்தனை சிறப்பாக நடக்கும். தொழில்துறையில் இருந்த போட்டிகள் விலகும்.
அரசுத்துறை வேளையில் பாராட்டைப் பெறுவீர்கள். ஊழியரின் உழைப்பை முதலாளிகள் அங்கீகரிப்பார்கள். வியாபாரம் நல்லவிதமாக நடக்கும்.
Meenam

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள்.
காலை வார நினைக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள்.
கட்டுமானத் தொழில் சிறப்பாக நடக்கும். உலக விற்பனையாளர்கள் நல்ல லாபம் பார்த்து உற்சாகம் அடைவீர்கள். எதிர்பாராத உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
#Astrology
Leave a comment