WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 4
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (08.05.2022)

Share

Medam

medam

படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள்.

தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள்.

குடும்பத்தினர் வருத்தம் அடையக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு வேலை பார்ப்பீர்கள்.

 

Edapam

edapam

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள். அடுத்து கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள்.

வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள்.

உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள்.

Mithunam

mithunam

பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள். ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

பணி நிமித்தமான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். டீக்கடை வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும்.

பெட்டிக்கடை வியாபாரிகள் பிரச்சனை தீரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். குடும்பத்தினர் உங்கள் மனமறிந்து நடப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

                                                                                                                        Kadakam

kadakam

 

தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியில் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டுங்கள்.

வெளியூர் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும். எதிர்காலம் கருதி பொறுமையுடன் இருப்பீர்கள். மனநிம்மதி குறையும்.

                                                                                                                   simmam

 

simmam

வேலையாட்கள் பற்றாக்குறையால் தொழில் முடங்கும். மெட்டீரியல் இல்லாமல் கட்டிடத் தொழில் சுணங்கும்.

சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்காமல் எலெக்ட்ரிசியன்கள் திணறுவார்கள். வெளியிடப் பயணங்களால் பயன் அதிகம் இருக்காது.

நிதானத்தை இழக்காமல் வேலை பாருங்கள். டீக்கடையில் அமர்ந்து ஊர்வம்பு பேசாதீர்கள்.

 

                                                                                                            Kanni

kanni

எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். மளமளவென்று பணவரவு அதிகரிக்கும். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள்.

அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சுறுசுறுப்பாக நடக்கும்.

ஒரு மடங்கு எதிர்பார்த்த லாபம் இரு மடங்காக பெருகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

                                                                                         Thulaam

thulaam

பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனைப் பெறுவீர்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள்.

கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள்.

 

                                                                                                        

                                                                                                       Viruchchikam

viruchchikam

வேலையிடத்தில் சக ஊழியர்கள் வில்லங்கம் ஏற்படுத்துவார்கள். புரிந்து கொள்ளாமல் பேசி குடும்பத்தினர் உங்கள் மனதைக் காயப்படுத்துவார்கள்.

எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள்.பிள்ளைகளின் பிரச்சினைக்காக கல்லூரிக்குச் செல்வீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வர தாமதமாகும். அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்காது.

 

Thanusu

thanusu

எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சகோதரிகள் திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். திருப்திபடுத்த முடியாது.

கையில் வைத்திருக்கும் பணத்தை கவனமாகக் கையாளுங்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்லுங்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். உறவுகள் உடைந்து போகும். சந்திராஷ்டம்

Maharam

magaram

சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டு உங்களை உச்சி குளிர வைக்கும்.

உறவுகளை தேடிச் சென்று உதவுவீர்கள் வீட்டுக்காக எதிர்பார்த்த வங்கி லோன் சாங்ஷன் ஆகும். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

நடைபாதை வியாபாரிகள் நல்ல பலன்களை அடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

 

 

Kumbam

kumbam

ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் மனம் நாட்டம் கொள்ளும். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.

இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள்.

தொழிலில் உங்கள் வேகத்தைப் பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் சோர்வடைய மாட்டீர்கள்.

 

Meenam

meenam

 

உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.

பிள்ளைகள் ஏதாவது பிரச்சனையைக் கொண்டு வருவார்கள். மனைவியின் பேச்சு கோபத்தைத் தூண்டும்.

பொறுமையைக் கடைபிடியுங்கள். வேலையிடத்தில் பெயரைக் கெடுக்க முயற்சி நடக்கும். உங்கள் முன்னேற்றம் பிடிக்காமல் குழி பறிப்பார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...