Medam

வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கூட்டுத் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது.
வெளியூர் பயணங்களால் தொழிலுக்கு நன்மை உண்டாகும். பணப்பற்றாக்குறை அகலும்.
Edapam

பொருளாதாரத் தடைகள் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். தூரதேசப் பயணங்கள் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
அரசுப்பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போகும்.
வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Mithunam

எல்லாவிதமான குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடப்பீர்கள்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.
நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
Kadakam

தொழிலில் அதிகமான முதலீடு செய்ய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள்.
வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகள் தாமதமாகும். ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தால் நல்ல நட்புகளை இழக்காதீர்கள்.
simmam

குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுங்கள்.
வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருங்கள். வேலையிடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். தொழில் போட்டிகளால் முடிவுகள் எடுக்க திணறுவீர்கள்.
Kanni

தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரிசியன்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவார்கள்.வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். பிள்ளைகள் கல்வியில் மேன்மையடைவார்கள்.
Thulaam

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள்.
வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகளை களைவீர்கள். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். கடல்கடந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும்.
Viruchchikam

நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலைகள் நீங்கும்.
வேலை இடங்களில் சுமூகமான நிலை உருவாகும். தந்தையாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் அமையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Thanusu

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை.
அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்கள் வந்து சேரும். பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள்.
வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள் தாமதமாகும். கணக்கு வழக்குகளை கவனமாக எழுதுங்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள்.
Maharam

உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். வேலை இடங்களில் இருந்த பிரச்சனை விலகும். அரசுப் பணியாளர்கள் அதிக நன்மை அடைவார்கள்.
கட்டிடத் தொழிலாளர்கள் கணிசமான பணம் சேர்ப்பார்கள். ஒர்க்ஷாப் வைத்திருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
Kumbam

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளிப்பீர்கள்.
சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.
மின்சாரப் பொருட்கள் பழுதாகி சிரமப்படுத்தும். வங்கி வேலைகள் தாமதமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.
Meenam

சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.
மனைவி குழந்தைகளால் மனநிம்மதிக்கு பங்கம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள்.
வியாபாரத்தில் அதிக நன்மை உண்டாகும். நல்ல அலைச்சலுக்குப் பின்பே அரசு வேலைகள் நடக்கும். கடனை அடைக்கப் போராடுவீர்கள்.
#Astrology
Leave a comment