இன்றைய ராசிபலன் (03.05.2022)

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 1

Medam

வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாக காணப்படுவீர்கள்.

தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகள் நீங்கும்.

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். மனக்கவலை மறையும்.

Edapam

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள்குத்து வேலை நடக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்களில் அலைவீர்கள்.

பிள்ளைகள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அரசுப்பணியாளர்கள் நேரம் தவறாமல் வேலை பார்க்கவேண்டும்.

 

Mithunam

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது சாலையில் கவனமாக இருங்கள்.

பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இருந்தாலும் இறுக்கம் இருக்காது.

 

                                                                                           Kadakam

திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும்.

உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானம் ஏற்படும். திடீர் பிரச்சனைகள் உண்டாகி சரியாகும்.

தொழிலுக்கு இருந்த எதிர்ப்பு விலகி ஓடும். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். தங்க நகைகள் வாங்குவீர்கள்.

Simmam

நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

பெற்றோர்களின் அன்பும் ஆசியும் உற்ற துணையாக திகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய வேலைகள் சாதகமாக முடியும்.

 

 

                                                                                                            Kanni

எதிரிகள் உங்கள் வியாபாரத்தை கெடுக்க நினைப்பார்கள். எச்சரிக்கை தேவை. எடுத்த காரியம் தாமதமாகும்.

கவலை மனதை வேதனைப்படுத்தும் எதிர்பார்த்ததைவிட லாபம் குறையும். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. மனைவியின் உடல் நலக்குறைவு சரியாகும்.

                                                                                                                                                                     

                                                                                         Thulaam

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகம் அதிகரிக்கும். ஆனால் அதை கட்டுப்படுத்துங்கள்.

பங்கு முதலீடு சாதகமாக இருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலும் சிக்கல்களை சந்திக்கும்.

பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும்.ஆவணங்களில் படித்துப் பார்த்து கையெழுத்து போடுங்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

                                                               

                                                                                                     Viruchchikam

நண்பர்கள் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வேலைப்பளு குறையும். வீண் அலைச்சலும் குறையும்.

அரசாங்கத்தில் புதிய ஆர்டர்களை பெறுவதற்கான தடைகள் நீங்கும். குடும்பத்தில் இணக்கமான போக்கு காணப்படும். பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள்.

 

Thanusu

உறவுக்குள் இருந்த சிக்கல் தீர்ந்து சமரசம் ஏற்படும். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உயர்வான பலன் அடைவார்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். அவசரப்படாமல் காரியம் ஆற்ற வேண்டும். தேவையற்ற வீண் கவலை உண்டாகி விலகும்.

 

Maharam

பணியாளர்கள் அலுவல் சுமையால் அவதிப்பட நேரும். குடும்பத்தில் உள்ளவர்கள் கோபத்தை தூண்டுவார்கள்.

முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரப் பயணங்கள் வெற்றி தரும். திட்டமிட்டபடி சிறப்பாக தொழில் நடக்கும்.

நாணயமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவமானம் ஏற்படும். இடம் விட்டு இடம் மாற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும்.

 

Kumbam

ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள்.

உற்ற நண்பர்கள் உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள்.

அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் வெற்றி நடைபோடும். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.

 

Meenam

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் அகலும்.

எதிர்ப்புகள் தாமாகவே விலகும். திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் உண்டாகும். பேச்சு திறமையால் வெற்றி பெறுவீர்கள்.

 

#Astrology

Exit mobile version