Medam
நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கை கொடுப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கான பணத்தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பெருவதற்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.
Edapam
வியாபாரத்தில் நிலவிய போட்டிகள் குறையும். வேலையிடத்தில் கடுமையாகப் பணி செய்வீர்கள்.
அரசு ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாகும்.
பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்டகாலமாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். மனம் விட்டுப் பேசுவது தம்பதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
Mithunam
வெளியூர் பயணங்கள் நன்மையைத் தராது. விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டும்.
கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வடையும். காரியங்கள் தாமதமாக இருந்தாலும் இறுதி வெற்றி கிடைக்கும்.
பிள்ளைகள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் குறையாமல் இருக்கும்.
Kadakam
புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் நிலையான வருமானம் பெறுவீர்கள்.
அரசாங்க உதவி தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். வெளியூர் பயணங்களால் பயன் உண்டு.
சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பர். வண்டி வாகனங்கள் வாங்க யோகமுண்டு.
Simmam
மனதை அழுத்திய கவலைகள் நீங்கும். உயர்மட்டப் பதவியில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
வீடு கட்ட திட்டம் போடுவீர்கள். சாதுரியமான காரியங்களால் வியாபாரிகள் சாதகம் அடைவார்கள்.
கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கடன்கள் அடைபடும்.
Kanni
வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். சரக்குகளைக் கவனித்து வாங்குங்கள்.
தொழில் தொடர்பான செலவு கூடும். சகோதரர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவி தாமதப்படும். சேர்ந்தாரைக் கொல்லும் சினம்.
கோபத்தை அடக்கினால் குடும்பத்தில் பிரச்சனை வராது. சோம்பேறித்தனமாக வேலை செய்யாதீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.
Thulaam
பழைய சிக்கல்கள் தீர்க்க பாடுபடுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டாலும் காரியத் தடை உண்டாகும்.
வியாபாரம் சுமாராக நடக்கும். இரும்புத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வீட்டுத் தேவைக்காக செலவு செய்வீர்கள்.
வண்டி வாகனங்கள் பழுதாக நேரலாம் . குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய ஒப்பந்தம் தாமதமாகும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.
Viruchchikam
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படலாம்.
தரம் பார்த்து உதவி செய்ய வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். வியாபாரம் சுமாராக நடக்கும். வாக்கு வன்மையால் ஆதாயம் பெறுவீர்கள்.
Thanusu
நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தினருக்கு தேவையானதைச் செய்வீர்கள்.
ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உண்டாகும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.
அரசு அதிகாரியிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். மாணவர்களின் கல்விச் செலவு அதிகரிக்கும்.
Maharam
அரசு வேலையில் இருப்பவர்கள் உயர்ந்த பதவிக்குச் செல்வார்கள். தொழில் தொடர்பான பணம் கைக்கு வரும்.
அரசாங்க அதிகாரிகள் ஆதரவு உண்டு. அலைச்சலுக்குப் பிறகு வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். உடன் வேலை செய்பவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்பாடு காணும். குடும்பத்தைப் பற்றிய கவலை அகலும். வீண் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
Kumbam
திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கும். எதிர்பார்த்த இட மாறுதல் கிடைக்கும். காரியத் தடையால் ஏற்பட்ட கவலை மறையும்.
தக்க சமயத்தில் உறவினர்கள் உதவி செய்வார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு. நன்கு சிந்தித்து சுய புத்தியுடன் செயல்படுங்கள்.
Meenam
வியூகம் அமைத்து வியாபாரம் செய்வீர்கள். அதனால் நல்ல லாபம் பெறுவீர்கள். அரசுப்பணியாளர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பார்கள்.
ஊழியர்களுக்கு முதலாளியின் கருணைப் பார்வை கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் திருப்தியாக இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து ஒற்றுமை ஓங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
#Astrology
Leave a comment