இன்று கிருஷ்ண ஜெயந்தி – வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபடுங்கள்

உலகளாவிய இந்துக்களால் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் போது இவற்றை மறக்கக்கூடாது.

பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம்

பூஜைக்குரிய மலர்கள் : மல்லிகை.

நிவேதனப் பொருட்கள் : பால், வெண்ணை, தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

படிக்க வேண்டிய நூல் : கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள், கீதையின் நன்நெறிகள் வசீகரிப்பவன்

500x300 1748451 krishna janmashtami footprints

வீட்டில் கண்ணன் பாதம் வரையுங்கள்

வீட்டுக்கு கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும். செல்வம் பொங்கும் என்பது நம்பிக்கை. இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் “நமோ நாராயணா” என்ற எட்டு எழுத்து மந்திரமும் “நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

கிருஷ்ண பரமாத்மாவை எப்படி வழிபட வேண்டும்?

ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பேருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

Exit mobile version