இன்று ஆவணி ஞாயிறு. விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது காலம்காலமாக பேணப்பட்டுவரும் ஐதீகமாகும்.
சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள்.
தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும். எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர்.
ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.
#Astrology