இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். கிரகங்களின் அமைப்பால் சர்வசித்தி யோகம் உருவாகிறது. இன்று சித்த யோகம் கூடிய சுப தினம். இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் உணர்ச்சியின் அடிப்படையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புதிதாக ஏதாவது தொடங்க அல்லது செலவிட நினைத்தால் அதில் கவனம் தேவை. தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் துணையின் ஆலோசனை தன்னம்பிக்கையை தரக்கூடியதாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களின் நிதி நிலையம் மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களின் திறமை மற்றும் வீட்டை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இன்று எதிர் பாலினத்தவரருக்கு கடன் கொடுக்கும் விஷயங்களில் கவனம் தேவை. எனில் அது திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு. இன்று உங்கள் வேலையில் சிரமங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதால் சரியான திட்டமிடுளுடன் செய்து முடிக்க முயலவும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். . உடல் நலனில் கவனம் தேவை.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்தவர்கள் அன்றாட வாழ்க்கையில் நிதானமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்கவும். இன்று உங்கள் சகோதரர்களுடன் நல்ல உறவு பேணுவது அவசியம். இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை, முயற்சிகளில் வெற்றியை காண்பீர்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். இன்று மன அமைதியை பெற யோகா தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
கடக ராசி பலன்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று நம்பிக்கையும் ஆற்றலும் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று அவசரத்தால் தவறான செயல்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். இன்று நண்பர்களுக்காக நிதி உதவி செய்ய முயல்வீர்கள். உங்கள் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலை ஏற்படும். கணவன் மனைவி இடையாளான உறவு மேம்படும். அதிகப்படியாக கோபப்படுவதை தவிர்க்கவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சூரிய பகவானின் அமைப்பால் ஏராளமான ஆற்றலும் நம்பிக்கையும் நிறைந்திருக்கும்.இன்று கிரக நிலைகள் உங்களுக்கு சில சாதகமாற்ற சூழலை தரும். குறிப்பாக உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பது, முதலீடு போன்ற அதிக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். இன்று உங்களின் ஈகோ உணர்வு அதிகரிக்கும். அதனால் உறவில் தேவையற்ற விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சில் நிதானம் மற்றும் இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று பிறருடன் கூட்டு சேருவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலான நேரத்தை வேலை தொடர்பான கடினமான சூழ்நிலை சமாளிக்க செலவிடுவீர்கள். புதிய நண்பர்களுடன் நட்பு ஏற்படும். இன்று ஆன்மீகத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்கள் உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தவறான நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். உங்கள் குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்தாதீர்கள். குடும்பத்தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை குறிப்பாக சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதே சமயம் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். உங்களின் நிதிநிலை வலுப்படுத்துவதில் கவனம் தேவை. பொறுமையுடன் உங்கள் பணிகளை தொடர்ந்து செய்து முடிக்கவும். தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பெற முயல்வீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு பல பணிகளில் உங்களுக்கு உதவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று நிதி நிலையை சரியாக பயன்படுத்த உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் கடினமான நேரத்தில் உறவுகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கடந்த கால பிரச்சனைகள் மீண்டும் தலைத் தூக்க வாய்ப்பு உண்டு. மன அழுத்தம் அதிகரிக்க கூடிய நாள். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு பல பிரச்சினைகளை தீர்க்கும். குடும்ப சூழ்நிலை இயல்பாக இருக்கும். இன்று உங்களுடைய சுகாதாரத்தை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்புகளுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களின் செயல்பாடு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் செயல்பாடு எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதனால் நண்பர்களே நல்வழிப்படுத்தவும். இன்று வணிக நடவடிக்கைகள் சீரான முன்னேற்றத்தை தரும். அன்புக்குரியவர்களிடமிருந்து அவர்களின் அதிகமான எதிர்பார்ப்பு சில சிக்கலை ஏற்படுத்தும். இன்று ஒவ்வாமை அல்லது சில நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு பணியையும் மிகவும் கவனமாக செய்வது நல்லது. வெளிநாடு அல்லது வெளியூர் செல்ல விரும்பக் கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று சரியான திட்டமிடமும் கூடுதல் உழைப்பும் தேவைப்படும். வீட்டில் சில பதட்டமான சூழல் ஏற்படும். வணிகம் தொடர்பான எதிர்பார்த்த மாற்றம் காண தொடர் முயற்சி தேவைப்படும். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என்பதால் பேச்சை நிதானம் தேவை. ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியை சேர்ந்தவர்கள் இன்று உங்கள் வேலை தொடர்பாக சலிப்பான மனநிலை ஏற்படும். கலை மற்றும் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். வீட்டில் சுபா நிகழ்ச்சிகளுக்காக நான் ஏற்பாடு செய்தீர்கள். இன்று குழந்தைகள் படிப்பில் கவன குறைவு ஏற்படும். தொழில் தொடர்பான சில நபர்களின் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவை புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயலவும். சிலருக்கு இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்படலாம்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்கள் இன்று அதிர்ஷ்டத்தை நம்பி செயல்பாடுகளை குறைக்க வேண்டாம். இன்று உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடின உழைப்பு செய்ய வெற்றி அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலை வலுப்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இன்று தாய்வழி சொந்தங்களிடம் உறவு மோசமாகலாம். கல்வி தொடர்பான விஷயங்களை கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனம் தேவை சில பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.

