ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 23 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan

Share
tamilnaadi 2 scaled
Share

இன்றைய ராசிபலன் : 23 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஆகஸ்ட் 23, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். சிம்ம ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2024, குரோதி வருடம் ஆவணி 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகள் புது ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள்.சிறப்பான லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தென்படும். குடும்பத்தினருடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இன்று உங்களின் புகழ் பரவும். பிள்ளைகளின் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களில் கவனம் செலுத்துகிறீர்கள். மன அமைதிக்காக ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்வீர்கள். வழக்கு விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் உதவியால் கல்வி தொடர்பான தடைகள் தீரும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்க அதிகம் செலவிட வேண்டியது இருக்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேற்றுவீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் முக்கிய வேலைகளை முடிப்பதில் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். கடின உழைப்புடன் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் எதிர்காலத்தில் சிறப்பான பலன்களை. வியாபாரத்தில் புதிய உத்திகளால் வெற்றி பெறுவீர்கள். இன்று சோம்பலை விரட்டி சுறுசுறுப்புடன் செயல்பட சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் எதிர்கால திட்டங்கள் நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று அதிக அலைச்சல் ஏற்படும். மும்முரமான வேலைகளுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரத்தை ஒதுக்க முயற்சி செய்யவும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் சொல், செயலில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். வேலையுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். இன்று நிதிநிலை வலுவாக இருக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உள்ள சச்சரவுகள் தீரும். உங்கள் வேலைகளை முடிப்பதில் புதிய திட்டத்துடன் செயல்படவும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள், பிரச்னைகள் விலகும். உங்கள் துணைவிக்கு பரிசு கொடுக்க நினைப்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சூழல் மிகவும் வலுவாக இருக்கும். இன்று உங்களின் நிதிநிலை சற்று பற்றாக்குறை இருந்தாலும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். இன்று குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி நிகழ்வீர்கள். வீட்டில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பின் வியாபாரத்தில் நீங்கள் சிறிய முயற்சி எடுத்தாலும் பெரிய லாபத்தைப் பெற வாய்ப்புள்ள நாளாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காகப் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கும். புதிய வணிக வாய்ப்புகள் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பேச்சு, நடத்தையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இன்று பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்படும். அதை வீட்டு வேலைகளையும் முடிக்க பொன்னான வாய்ப்புகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவை எடுக்க வேண்டியது இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக இருந்த உடல் நலப் பிரச்சினை தீரும். ஆரோக்கியம் மேம்படும். வணிகத்தில் நல்ல செய்திகள் தேடிவரும். லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். படிப்பு தொடர்பான விஷயத்தில் மாணவர்கள் சாதகமான பலன்களை பெறுவீர்கள். திருமணத்தில் இருந்த தடைகள் விலகும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க் மூலம் சிறப்பான பலன்கள் பெறுவீர்கள். இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் கடினமான சூழ்நிலையைச் சமாளிப்பீர்கள். இன்று பணியிடத்திலும், குடும்பத்திலும் நிதானமாக நடந்து கொள்ளவும். சகோதரர்களுடன் உறவு மேம்படும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...