Medam
இன்று உங்களுக்கு ஏற்றம் தர பிறந்த நாளாக அமையும்.நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் பார்ப்பீர்கள். வாழ்க்கைத் துணைவியின் அனுசரணையால் வீட்டில் வசந்தம் வீசும்.
தொழிலில் புதிய முயற்சிகள் மூலம் சாதனை செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
Edapam
நல்ல அலைச்சலுக்கு பின்பே காரியம் வெற்றியடையும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு தாமதமாகும்.
நண்பர்களின் நிறமாற்றம் மனக்கவலையை உருவாக்கும். தொழில் போட்டிகள் நிலவும், வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
வியாபாரம் சீராக நடக்கும். வெளியூரிலிருந்து செய்திகள் தாமதமாக வரும். வீட்டில் மனைவி பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும்.
Mithunam
நினைத்தது நடப்பதால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உடனே பணம் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு பணம் தாராளமாக புரளும். கைத்தொழில் கணிசமான லாபத்தை கொடுக்கும்.
போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். கார் பைக் போன்ற வாகனங்கள் யோகம் உண்டு. வேலையிடத்தில் இருந்த பிரச்சனைகள் மறையும்.
Kadakam
நம்பமுடியாத அளவுக்கு நன்மைகள் வந்து சேரும்.கஷ்டமான சூழ்நிலையில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள்.
தொழிலில் புதிய யுத்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். வேலை காரணமாக வெளிநாடு செல்வீர்கள். அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.
இல்லத்தரசிகள் இடையூறு செய்யாமல் இருப்பார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
Simmam
சின்ன சின்ன இடையூறுகள் சிந்தனையை பாழாக்கும். தொழில் துறைகளில் மந்தமான போக்கே காணப்படுகிறது.
சகோதர சகோதரிகள் உறவுகளால் பிரச்சனையை சந்திப்பீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தாலும் லாபம் குறைவு தான்.
கோபத்தால் வீட்டில் குழப்பம் வரலாம். நண்பர்களுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். போட்டி பந்தயங்கள் பயன்தராது.
Kanni
வங்கிகளின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வாக்குத் திறமையால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். நகை அணிகலன்கள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்விப்பீர்கள்.
Thulaam
கேட்ட இடத்தில் கடன் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் தலை குனிவு ஏற்படும்.
பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தை சரிவு உண்டாகும். பந்தயங்களில் வெற்றி தள்ளிப்போகும்.
தொழில் துறைகள் சுமாராகவே நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பார்க்க இயலாது. அரசுத்துறை பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
Viruchchikam
போட்ட திட்டங்கள் மாறுபடும். குடும்பத்தாரின் மாற்று கருத்தால் நிலையான முடிவு எடுக்க முடியாது.
யாருக்கும் பணம் தருவதாக வாக்கு கொடுக்க வேண்டாம். தொழிலாளர்களால் பிரச்சனை உருவாகும்.
லாட்டரி போன்ற பந்தயங்கள் லாபம் தராது. விரயச் செலவுகள் அதிகமாகும். அலைச்சலும் உங்களை பாடாய் படுத்தும். வண்டி வாகனங்களில் பழுது ஏற்படலாம்
Thanusu
திடீரென்று பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். தொழிலாளர்கள் வேலைத்திறனால் லாபம் பெருகும்.
நடைபாதை வியாபாரிகள் கைநிறைய காசு பார்ப்பார்கள். தாய் தந்தையரை பிள்ளைகள் மதித்து நடப்பார்கள்.
வாழ்க்கை துணை கணவனுக்கு அனுசரணையாக இருப்பார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
Maharam
மனைவி பிள்ளைகளோடு குளிர் பிரதேச பயணம் செல்வீர்கள். கணினித்துறையில் திறமையால் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
புதிய வேலைகள் அவர்களுக்கு கிடைக்கும். சாலையோர வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும்.
பணப்புழக்கம் அதிகமாகும். மன இறுக்கம் குறையும். ஆன்மீக காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். வெளிவட்டார செல்வாக்கு உயரும்.
Kumbam
பழைய பகை மறைந்து புதிய உறவுகள் ஏற்படும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் சூடுபிடிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
வீடு பராமரிப்புச் செலவும் வரலாம். கையில் காசு புரளும். தொழில்கள் பாதகமில்லாமல் நடக்கும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி தெரியும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
Meenam
சொல்லி வைத்தாற்போல் காரியங்கள் தள்ளிப் போகும். வெளியூர் பயணங்களை தள்ளிப்போடுவது நல்லது.
தொழிலில் போட்டிகள் தலைதூக்கும்.சந்தை வியாபாரிகளுக்கு மழையால் பாதிப்பு ஏற்படும். பிள்ளைகளின் நடத்தை பெற்றோர்களுக்கு தலைவலியாக இருக்கும்.
போட்டி பந்தயங்களில் ஈடுபடவேண்டாம். கையில் காசு தங்காது.
#Astrology