சொந்த வீடு அமைய இவற்றை செய்யுங்கள்

housee

சொந்த வீடு அமைய இவற்றை செய்யுங்கள்

சிறிய வீடானாலும் சொந்த வீட்டில் வாழ்வது போன்று வராது என்பர்.

அனைவரின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்குவது. அதற்காக சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வாங்குவீர்கள். இருப்பினும் வீடு வாங்குவது சில நேரங்களில் சாதகமற்றதாக அமைந்து சொந்த வீடு வாங்குவது கனவாகிவிடும்.

ஆனால் ஒவ்வொரு ராசியினரும் அவருக்குரிய தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்து வந்தால் அனைத்தும் சாதகமாக அமையும். மனை வாங்கும் யோகம் வாய்க்கப் பெறலாம்.

செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி முருகப் பெருமானாவார். எந்த ராசியினராக இருந்தாலும் முருகப் பெருமானை வணங்கினால் வீடு பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதே போல ஒவ்வொரு ராசியையும் ஒவ்வொரு கிரகம் ஆள்கிறது. இந்த கிரகங்களுக்குரிய இஷ்ட தெய்வங்களை நாம் வழிபடுவது அவசியமாகும். அவ்வாறு நாம் பிரார்த்தனை செய்து வணங்கினால் நாம் நினைத்தபடி சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும்.

வீடு வாங்க ஒவ்வொரு ராசியினரும் வழிபடவேண்டிய தெய்வங்கள்

மேஷ ராசி   -அம்பாள்
ரிஷப ராசி    – சிவபெருமான்
மிதுன ராசி  –  மகாவிஷ்ணு
கடக ராசி       -அம்பாள்
சிம்ம ராசி     – முருகப் பெருமான்
கன்னி ராசி   – காவல் தெய்வங்கள் மற்றும் சித்தர்கள்
துலா ராசி     –  விநாயகப் பெருமான்
விருச்சிக ராசி– பைரவர் மற்றும் காவல் தெய்வங்கள்
தனுசு ராசி    -முருகப் பெருமான்
மகர ராசி      – அம்பாள்
கும்ப ராசி   – குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்கள்
மீன ராசி      –  மகாவிஷ்ணு

Exit mobile version