இன்றைய ராசி பலன் 09.07.2023 -Today Rasi Palan
இன்று ஜூலை 9ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அன்று சந்திரன் மீன ராசியில் இருக்கும் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று ஆயில்யம், மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். கவனமாக இருக்கவும். இன்று ரிஷபம், மீன ராசியினருக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்குத் தகவல்கள் வந்து சேரும் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று தங்கள் முயற்சிகளைத் துவக்கலாம்.
குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய நாளாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் அரசியல் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள் குடும்பத்தில் அமைதி தவழும் உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
வேலையின் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நம் சிறந்த நாளாகும். பெரியோர்களின் ஆசீர்வாதத்தில் பெறுதல் போன்ற மன நிம்மதி தரக்கூடியது. பல நிகழ்வுகள் உண்டு.
புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்களில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
வயதானவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் சிறிய அளவில் ஏற்பட்டு விலகும் குழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். ஆயினும் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு
இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும் திருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்
ஓரிரு நாட்கள் கழித்து இவைகளை துவக்குவது நல்ல முன்னேற்றத்தைத் தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
இதனால் வெளிநாட்டு வாசம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவை தொடர்பான காரியங்களை என்று துவக்கலாம்.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
இன்று குடும்பம் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் நல்ல சமநிலையைப் பேணுவீர்கள். இந்த நேரத்தில் பொருளாதார லாபமும் கிடைக்கும். முழு முயற்சியுடன் உங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். சொத்து சம்பந்தமான எந்த வேலையையும் தவிர்ப்பது நல்லது.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதை முழுமையாக படிக்கவும். ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான தேதியை நிர்ணயிக்கவும். கூட்டுத் தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து வந்த நெருக்கடிகள் இன்று நீங்கும்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் வங்கிகளில் நிதி உதவி போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். படிப்பை முடித்து உத்தியோகத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான தகவல்கள் கை வந்து சேரும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் இவைகளில் நல்ல நிகழ்வுகள் இன்று உண்டாகும். தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இருந்து வந்த பொருளாதார பற்றாக்குறை மாறிவிடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடிப்படை காரியங்கள் என்று நடக்க வாய்ப்பு உள்ளது.
படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறைவான சம்பளத்திலிருந்து கூடுதலான ஒரு உத்தியோகத்தை நோக்கி செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
நண்பர்களுக்கு இந்த நாள் நல்லநாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள்.
பெண்களுக்கு இனிமையான நாடு ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதி கிடைக்க பெறுவார்கள்
- 09.07.2023
- 2023 rasi palan
- astrology today
- daily josiyam
- daily palan
- daily prediction
- daily rasipalan
- dinamalar joshiyam
- Featured
- horoscope today
- nalaiya rasi palan
- neram nalla neram
- rasi palan
- rasi palan today tamil
- sun tv rasi palan
- tamil jodhidam
- today astrology
- today astrology tamil
- today prediction
- today rasipalan
- இன்றைய ராசிபலன்
- தினசரி ராசிபலன்
Leave a comment