இன்றைய ராசி பலன் 16 மே 2025 – Daily Horoscope

tnadi

இன்றைய ராசிபலன் 16.05. 2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 2, வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நிறைய சிக்கல்கள் வரலாம். தேவையற்ற சண்டைகள், வாக்குவாதங்களால் அலைச்சல் ஏற்படும். சில வேலைகள் முடியாமல் போகலாம். அதனால் ஏமாற்றம் அடைய நேரிடலாம். ஆனால், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சிலும், நடத்தையிலும் நிதானம் தேவை. இல்லையென்றால் பிரச்சனைகள் வரலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் சரியாக வாய்ப்பு உண்டு.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நலம் சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கலாம். ஆனால், கூட்டுத் தொழில் வேண்டாம். அதனால் சிக்கல் ஏற்படும். மனதில் ஏதோ கவலை இருக்கும். சமூக வேலை தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு செயல்படுவது நல்லது. பெற்றோர்களுக்காக நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். பயணங்கள் மூலம் நல்ல அனுகூல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ரொம்ப சிறப்பான நாள். புதிய வாகனம் வாங்கலாம். குடும்பத்துடன் மங்களகரமான விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வது நல்லது. மனதில் இருக்கும் பிரச்சனைகளை பெரியவர்களிடம் பேசலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்தித்து சந்தோசப்படுவீர்கள். பங்குச் சந்தை மற்றும் பந்தயங்களில் பணம் போடுவதைத் தவிர்க்கவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட விஷயங்களில் நல்ல நாள். புதிய வருமான வழிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சை மதிப்பார்கள். அதனால் சந்தோஷமாக இருப்பீர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வேலை விஷயமாக குறுகிய தூர பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திடீர் லாபம் கிடைக்கும். வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கவும். விபத்து நடக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம். அதில் ஏமாற வாய்ப்புள்ளது. ஏதாவது கவலை இருக்கும். புதிய வேலை தொடங்க நல்ல நாள். உடன்பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவுகள் இருந்தால் சரியாகும். மாணவர்கள் படிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆசிரியர்கள் உதவியால் சரியாகும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கவலைகள் நிறைந்த நாள். வேலையில் டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். மனதில் பயம் இருக்கும். அதனால் கவலையாக இருப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாய்ப்பு உண்டு. அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வேலை விஷயமாக குறுகிய தூர பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மரியாதை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கலாம். இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் யாராவது உங்கள் பேச்சால் மனம் புண்படும். படிப்பில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்தித்து சந்தோசப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மறைத்து வைத்த விஷயங்கள் தெரிய வரலாம். புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றப் பாதைகள் திறக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வதந்திகளை நம்பி விவாதம் செய்ய வேண்டாம். நஷ்டம் வரலாம். நண்பர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். நிதானமாக, சுயமாகச் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் பிரச்சனை வரலாம். பெரிய பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். உடல்நலம் சரியில்லாமல் போகலாம். உங்கள் மனக்குறைகளை உங்களை புரிந்து கொண்டவர்களிடம் சொல்ல மனக்குறை குறையும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர் உங்களை பார்க்க வரலாம். புதிய வியாபாரம் தொடர்பாக திட்டமிட சாதகமான நாளாக இருக்கும். வேலையிடத்தில் அணியாக சேர்ந்து வேலையை செய்ய வெற்றி கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லைகள் நிறைந்த நாள். ஏதாவது கவலை இருக்கும். குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கும். பிசினஸில் ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால் செய்யலாம். ஆனால், ரிஸ்க் எடுக்க வேண்டாம். நஷ்டம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். வேலை விஷயமாக குறுகிய தூர பயணம் செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு கல்யாண தடைகள் நீங்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று சிறப்பாக இருக்கும். பிசினஸில் பழைய திட்டங்களால் லாபம் கிடைக்கும். அதனால் சந்தோஷமாக இருப்பீர்கள். பல நாளாக தடைப்பட்டு இருந்த வேலை முடிக்க முடியும். உடல் உபாதைகள் சரியாகும். மாணவர்கள் படிக்கும் பிரச்சனைகளை ஆசிரியர்களிடம் கேட்கலாம். பெற்றோருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆடம்பர பொருட்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்கலாம். பெரியவர்கள் சந்தோசப்படுவார்கள். மனைவியிடம் இருந்து பரிசு கிடைக்கும். பெற்றோர்களின் ஆசியுடன் சிறிய தொழில் தொடங்கலாம். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும். ஆனால், மேலதிகாரிகளின் உதவியால் வேலையை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.

Exit mobile version