Medam
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். தெய்வ வழிபாட்டால் மனதுக்கு அமைதி உண்டாகும்.
Edapam
சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்று. செலவுகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். மனம் மகிழும் நிகழ்வு ஒன்று நடைபெறக்கூடும். பிள்ளைகளால் சுபச் செய்தி கிடைக்கப்பெறும்.
Mithunam
முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேரவ. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். நிம்மதி உண்டாகும். தெய்வவழிபாடு மூலம் நினைத்த காரியம் நிறைவேறும்.
Kadakam
மனதுக்கு விரும்பிய ஒருவரை சந்திப்பீர்கள். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் உண்டாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
Simmam
பணியிடத்தில் நிலவிய போட்டிகள் அகலும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மற்றவர்களுடன் வீண் மன1்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
Kanni
சுபச் செய்திகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சிறுசிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
Thulaam
திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும். பெரியவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.
Viruchchikam
தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தானம் விலகும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். பொறுப்புக்களில் கவனமாக கையாள்வீர்கள். பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து செயற்படுவீர்கள்.
Thanusu
சில சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி ஏற்படும். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Maharam
உற்சாகமாக செயற்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். லாபம் கூடுதலாக உண்டாகும்.
Kumbam
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.
Meenam
அவசரமின்றி அமைதியாக செயற்படவும். பணியிடத்தில் பொறாமை நீங்கி பணி சிறக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் சாதகமாக அமையும்.

