பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும்.
- ஒரு உண்டியல் வாங்கி வீட்டில் வைத்து பாருங்கள். கட கடவென சில்லறைகள், நோட்டுகள் என்று ஆர்வமாக போட்டு கொண்டு வருவோம். சிறிது காலத்திலேயே அந்த உண்டியலும் நிரம்பிவிடும்.
- செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைப்பது நல்லது. பணப்பெட்டி அல்லது பீரோ இவற்றில் தான் பணத்தை வைக்க வேண்டும்.
- பணத்தைப் பணமாக மட்டும் பார்க்காமல் மகாலட்சுமி ஆக பார்க்க வேண்டும். அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
- பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும்
#AnmegaTips #lifestyle
Leave a comment