இன்றைய ராசி பலன் (08.12.2021)

WhatsApp Image 2021 12 07 at 10.15.52 PM

Medam

அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.  சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கல் இலாபகரமாக அமையும். தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். வெற்றிகள் தேடி வரும்.

 

Edapam

மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உதவி கிடைப்பதில் காலதாமதமாகும்.

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

 

Mithunam

சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் நேரிடும். மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள்.

வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

 

Kadakam

மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். பணம் வரவு காணப்படும்.

கடன் பிரச்சினை தீரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

Simmam

குடும்பத்தினரால் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

 

Kanni

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரச உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

ஆடம்பர செலவுகள் காணப்படும். சிக்கனத்தின் மூலம் பணப்பிரச்சனை நீங்கும்.

சொந்த பந்தங்களின் உதவி கிடைக்கும்.

 

Thulaam

எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம்.

உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

 

Viruchchikam

எடுத்த காரியத்தையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி இலாபம் அதிகரிக்கும்.

உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உடன்பிறந்தவர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும்.

 

Thanusu

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுபசெய்திகள் தேடி வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வங்கி சேமிப்பு உயரும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.

 

Maharam

தொழில் வியாபார முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு அதிகரிக்கும்.

வீட்டில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.

 

Kumbam

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புதிய பொருட்கள் வாங்குவீர்கள். மன நிம்மதி அதிகரிக்கும்.

புதிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் பலன்கள் கிடைக்கும்.

 

Meenam

வேலையாட்களின் ஒத்துழைப்பால் திடீர் வருமானம் அதிகரிக்கும்.

எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. சிக்கனம் தேவை.

பண பற்றாக்குறையை சமாளிக்க முடியும். கடன் பிரச்சினை நீங்கும்.

 

 

#Astrology

Exit mobile version