இன்றைய ராசி பலன் 11.07.2023 -Today Rasi Palan
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11.07.2023 -Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 11.07.2023 -Today Rasi Palan

இன்று ஜூலை 11 ஆம் தேதி, சந்திரன் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி பின்னர் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று கன்னி ராசியின் உத்திரம் நட்சத்திரதிற்கு சந்திராஷ்டம நாள். இன்று மேஷம், மிதுன ராசி உட்பட பலருக்கு மிக சிறந்த நன்மை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
நீங்கள் எதிர்பார்க்காத உங்கள் நீண்டகால ஒப்பந்தத்தை இன்று முடிப்பீர்கள். குடும்பத்துடன் விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். தடைப்பட்ட அரசு பணிகளில் இன்று முடிய வாய்ப்புள்ளது. ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
வியாபாரத்தில் சில புதிய திட்டங்களை தீட்டு செயல்படுத்துவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆன்மிக ஸ்தலத்திற்குப் புனித யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. பயணத்தின் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். இன்று வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் சிறு குழந்தைகளுடன் உல்லாசமாக நேரத்தை கழிப்பீர்கள்.

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
தொழில், வியாபாரத்தில் புதிய விஷயங்களை செயல்படுத்த நினைப்பீர்கள். புதிய யோசனைகளை இன்று உடனடியாக முன்னெடுத்துச் செல்லலாம். உத்தியோகத்தில் உங்கள் திட்டங்களை சக ஊழியர்களிடம் பகிர வேண்டாம். சில ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வரவு சிறக்கும் என்றாலும், செலவும் அதிகமாக இருக்கும். இன்று விருந்தினர்களின் வருகை இருக்கும்.

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
கடக ராசியினருக்கு இன்று எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதில் ஏமாற்றம் அடைவீர்கள். அதனால் மனம் கவலையடையும். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிக வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். அதனால் நீங்கள் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். இன்று கடின உழைப்பு தேவைப்படும். குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படலாம்.

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
இன்று உங்களுக்கு சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கி நன்மைகளைப் பெறுவீர்கள். சகோதர சகோதரிகளின் திருமணத்தில் இருந்து வந்த தடை நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். நிதி விஷயங்களில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். ஆன்மிக பணிகளில் ஆர்வமுடன் செய்வீர்கள். குடும்பத்தினருடன் உல்லாசமாக நேரத்தைக் கழிப்பீர்கள். இன்று பிள்ளைகள் மூலம் ஏமாற்றம் தரும் செய்திகள் கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமாக செயல்படவும். உங்கள் நடத்தையில் நிதானத்தையும், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் வேலை சற்று இழுபறியாக முடியும். இன்று யாரிடமும் தகராறில் ஈடுபட வேண்டாம். சட்டப்பூர்வமான விஷயங்களைக் கவனமுடன் அணுகவும். கடன் கொடுத்தல், வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம் இன்றைய ராசி பலன் – Libra
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
சுப காரிய முயற்சிகளில் சென்று வருவீர்கள் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைவதற்கு நீண்டகாலமாக அடிமைத் தொழிலில் இருந்துவிட்டு பின்னர் சொந்த தொழில் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளியூர்களில் வேலை கிடைக்கும்.

படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிப்பை முடித்து தாய் நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும்.

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
உங்கள் நடவடிக்கைகளில் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கவலையைக் குறைக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல் பிரச்சனைகள் நீங்கும். அழகு, ஃபேஷன் மற்றும் உணவு மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம். தேவை பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் சற்று காலதாமதம் ஆகும்.

ஒரு சிலருக்கு கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்திற்கான முதலீடு செய்வது பற்றிய எண்ணங்களும் செயல்பாடுகளும் இருப்பீர்கள். இவைகளில் வெற்றி பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் அழுத்தம் கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமையை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் நல்ல நாள் ஆகும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம் மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...