இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலனை (ஜூன் 30, 2024 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் மீனம், மேஷ ராசியில் ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று சிம்மம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசிபலன் ஜூன் 30, 2024, குரோதி வருடம் ஆனி 16, ஞாயிற்று கிழமை, சந்திரன் மீனம், மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். உங்களின் புகழ் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சவாலான நாளாக அமைய வாய்ப்புள்ளது. நிறைய பொறுப்புக்கள் காத்திருக்கும். குடும்பத்தொழில் செய்யக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் நிதி நிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய திட்டங்கள், வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரிக்கும். இன்று எந்த ஒரு வேலையும் புத்திசாலித்தனமாக செய்து முடிக்கவும். எந்த ஒரு வேலையும் ஒத்தி போட வேண்டாம். குடும்ப விஷயங்கள் மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். உறவினர்கள் மூலம் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களும் படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் அறிவு சார்ந்த விஷயத்தில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். இது உங்களின் மன உறுதியை அதிகரிக்கும். குடும்பத்தில் தகராறுகள் தீரும். தந்தையின் உடல்நிலை சற்று கவலை தரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். மாணவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு அனுகூலமான நாள். வியாபாரத்தில் இருக்கும் தடைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் எதிரிகளின் தலையிட அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தனை உடன் செயல்படவும். இன்று உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நீண்ட காலமாக எந்த மனக்கசப்பு தீரும். தொழில் தொடர்பான முயற்சியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்திலும், வியாபாரத்திலும் எதிரிகளின் தலையீடு அதிகமாக இருக்கும். உங்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகரமானதாக அமையும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக அழைத்தல் ஏற்படும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு மற்றும் அலைச்சல் அதிகரிக்கும் நாள். நீங்கள் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் போகலாம். உங்களின் அதிக செலவுகள் மன உளைச்சலை தரும். தேவையற்ற அலைச்சலால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். மாலையில் ஓரளவு நிம்மதியை ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செயல்பாடுகளுக்கான முழு பலனை பெறுவீர்கள். உங்களின் வேலை தொடர்பாக தந்தையின் ஆலோசனை சிறப்பான பலனைத் தரும். உடன்பிறந்தவர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். இன்று உங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் ஒப்பந்தங்கள் பெரிய லாபத்தை தரும். மாலை பொழுதில் உல்லாசமாக கழிப்பீர்கள்
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் வரலாம். இன்று உங்கள் செயல் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீட்டில் செல்வம் பெருகும். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சுப விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக பரிசு வாங்குவீர்கள். உங்களின் நிதி நிலை விஷயத்தில் கவனம் தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் வேலையில் நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பெரியவர்களின் ஆசீர்வாதம், ஆலோசனை உங்களின் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்பும் ஏற்படும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உங்களுக்கு வரவேண்டிய பணம் கிடைத்து மகிழ்வீர்கள். உங்களின் நிதி நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்..
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் பணத்தை முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும். வருங்காலத்தில் இதன் மூலம் சிறப்பான பலனை பெறுவீர்கள். இன்று புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். புதிய வேலை, திட்டங்களை தொடங்க சாதகமான நாளாக அமையும். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள்.