Medam

உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகுவார்கள். பெண்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடங்கலின்றி நடக்கும்.
தொழில் மந்தமாக காணப் பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. வீண் குழப்பங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கும்.
அரசியல் துறையினர் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.
Edapam

வெளிவட்டாரத் தொடர்புகள் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும். பிள்ளைகள் மீது கண்காணிப்பும் கண்டிப்பும் இருக்கட்டும்.
இடையூறுகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுறுசுறுப்பாக வேலை செய்தால் பாராட்டைப் பெறலாம்.
கொடுத்த இடங்களில் பண வரவு தாமதமாகும். அன்புடன் பேசுங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும்.
Mithunam

ண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பக்குவமாக நடந்து தொழிலில் லாபத்தை குவிப்பீர்கள். அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.
இல்லத்தரசிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளியூர் செய்திகள் மனதைக் குளிர வைக்கும்.
Kadakam

குறித்த நேரத்தில் வேலை முடியாமல் குழப்பத்தை உண்டாக்கும். விருப்பமில்லாத வெளியூர் பயணங்களும் ஏற்படும். தொழிலை விரிவாக்க அதிக அக்கறை காட்டுவீர்கள்.
சகோதர உறவுகள் சாதகமாக இருக்காது. வியாபாரம் ஓரளவு லாபத்தை தரும்.
எதிர்பார்த்த கடன் சுலபத்தில் கிடைக்காது. உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும்.
Simmam

குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கை கொடுக்கும். பிள்ளைகளும் மனைவியும் பிரியமாக இருப்பார்கள்.
Kanni

கூடுதல் பணி காரணமாக உடல் உபாதைகள் உண்டாகலாம்.கேட்ட உதவி கிடைக்காமல் மனச் சங்கடம் உருவாகலாம்.
வியாபாரத்தில் சரளமான போக்கு காணப்படும். பங்கு பரிவர்த்தனை தொழில் பாதகத்தை உண்டாக்கலாம்.
போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருங்கள். வேலையில் அக்கறை காட்டுங்கள். மேலதிகாரிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதீர்கள்.
Thulaam

எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் ஏமாற்றம் உண்டாகலாம். வீட்டிற்கும் வாகனத்திற்கும் செலவு செய்வீர்கள்.
தொழிலில் கால்பதிக்க திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரம் சுமாராக தான் நடக்கும். எதிர்பாராத விருந்து வீட்டிற்கு வரும்.
அது வில்லங்கத்தையும் தரும். பணியாளர்களின் விடுமுறையால் வேலையில் பாதிப்பு உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
Viruchchikam

லாபம் தரும் ஆர்டர்கள் உங்களைத் தேடி வரும். வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.
கணினித்துறை கனவுகளை நனவாக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
அரசுத்துறை பணியாளர்களுக்கு அதிக நன்மை உண்டாகும். லாட்டரி போன்ற பந்தயங்கள் மூலம் திடீர் பணவரவு கிடைக்கும்.
Thanusu

உங்களின் வியாபார நுணுக்கம் மற்றவர்களை வியப்படைய வைக்கும். எதிர்ப்புகளை துவம்சம் செய்வீர்கள்.
கைநிறைய தொழில். பை நிறைய பணம். நகைகள் வாங்கி கொடுத்து இல்லத்தரசிகளை அசத்துவீர்கள்.
வங்கிக் கடன்கள் தங்கு தடையின்றி வந்து சேரும். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் விலகி ஓடும். வியாபாரத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
Maharam

எதிர்ப்புகளைத் தகர்த்து ஏற்றம் பெறுவீர்கள். பங்குச்சந்தைகள் உற்சாகத்தை தரும். வெளியூர் பயணங்களால் இரட்டைப் பலனை அனுபவிப்பீர்கள்.
தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் உடனே கிடைக்கும். பதவி உயர்வு பண வரவு போன்றவை மகிழ்ச்சியைத் தரும்.
நில விற்பனை சூடுபிடிக்கும். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்கும்.
Kumbam

கடுமையாக உழைத்தும் வேலைகள் முடியாமல் கண்ணாமூச்சி காட்டும். பயணங்களால் பலன் குறைவாகவே கிடைக்கும்.
வீடுகளில் வீண் வாக்குவாதங்கள் அறவே ஆகாது. மனம் இருந்தாலும் உதவி செய்ய நண்பர்கள் கையில் பணம் இருக்காது.
புதிய உறவுகள் பொல்லாப்பை தரும். பிள்ளைகளின் பிரச்சனைகள் தலை வலியை உண்டாக்கும். கடன் சுமை அதிகரிக்கும்.
Meenam

கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலர் வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடக்கும்.
அத்தியாவசிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். செலவுக்கேற்ற வரவு வரும். கடன்கள் கைமீறி போகாது.
தாமதமான வேலைகள் தடங்கலின்றி நடக்கும். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை பெறுவீர்கள். லாபத்தோடு வியாபாரம் நடக்கும்.
#Astrology
Leave a comment