WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 1
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (03.02.2022)

Share

Medam

medam

உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் சீராகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். இன்று பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

லாப ஸ்தானத்தில் குரு சந்திர யோகம் கை கூடி வந்துள்ளதால் குதூகலமான நாளாக அமையும்.

 

 

 

Edapam

edapam

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம்.

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரி சொல்வதை கேட்டு நடக்கவும்.

 

Mithunam

mithunam

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும்.

குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் பெண்களில் சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும்.

 

 

Kadakam

kadakam 1

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேச வேண்டாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். சுப காரியம் தொடர்பாக இன்று பேச வேண்டாம்

                                                                                                                                                                               Simmam  

simmam

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

குருவும் சந்திரனும் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

.

Kanni

kanni

உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

Thulaam

thulaam

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்வீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைப்பது நல்லது.

Viruchchikam

viruchchikam

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வேலைக்கு இன்று அப்ளை செய்யலாம்.

 

 

Thanusu

thanusu

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும்.

வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர சகோதரி மூலம் உதவிகள் தேடி வரும்.

 

Magaram

magaram

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம்.

நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

 

Kumbam

kumbam

சுப காரிய முயற்சி செய்யலாம். நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும். லாபகரமான நாளாக அமையும்.

 

 

Meenam

meenam

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடன் பிரச்சினை நீங்கும். உணவு விசயத்தில்கவனம் தேவை. திடீர் பண வரவு வரும் சுப விரைய செலவுகள் வரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வீண் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

 

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...