நினைத்தவை நிறைவேற ஆவணி ஞாயிறு
மாதங்களில் ஆவணி மாதத்துக்கு தனிச் சிறப்பு உண்டு என்பர்.
குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த மாதம் இது. அத்துடன் கிருஷ்ண அவதாரம், விநாயகர் அவதாரம் என்பவை நிகழ்ந்ததும் இந்த மாதத்தில் தான்.
ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விரதம் இருப்பது மிகச் சிறந்தது. ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும். எனவே இந்த நாளில் விரதமிருந்தால் நினைத்தவை நடக்கும்.
உடல் ஆரோக்கியம் பெற சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிகச் சிறப்பானது விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்களை மேட்கொள்வதும் சிறந்தது.