சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
இது மிட்-ரேன்ஜ் 5ஜி பிராசஸர் ஆகும். ரெட்மி நோட் 12 சீரிசில் ஒரு மாடல் இந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி பிராண்டின் பொது மேலாளர் லுன் வெய்பிங் ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெய்போவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ஆண்டு இரண்டு ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய தகவல்களின் படி எண்ட்ரி லெவல் ரெட்மி நோட் 12 சீரிஸ் விலை ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிகிறது.
இம்மாத இறுதியில் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 12 சீரிசின் டாப் எண்ட் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
#redmi-note-12 -series