Telegram பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!!!

telegram

telegram

Telegram பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!!!

WhatsApp சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக இருக்கும் குறும்செய்திகளை பகிர்ந்துகொள்ளும் செயலியான டெலிகிராம், அதன் 10வது ஆண்டினை நினைவுகூரும் வகையில் ஒரு புதிய Update ஒன்றினை வெளியிட்டுள்ளது.

டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பாவெல் துரோவ் இந்த புதிய அம்சத்தைப் பற்றிய தனது கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டார். அடுத்த 10 ஆண்டுகள் டெலிகிராம் அதன் உண்மையான திறனை அடையும் காலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெலிகிராம் பயன்படுத்தும் அனைவரும் stories இனைப்பயன்படுத்த முடியும் இந்த அம்சம் முன்பு பணம் செலுத்திப்பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

நீங்கள் ஒரு டெலிகிராம் பயனராக இருந்தால் டெலிகிராம் செயலியினை Update செய்வதன் மூலம் Telegram stories இனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Exit mobile version