Snapchat பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!!!

Snapchat

Snapchat பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!!!

Snapchat நிறுவனமானது “Dreams” எனும் புதிய வசதியினை வெளியிட்டு இருக்கின்றது. இது Lenses எனும் பாவனையில் இருக்கும் வசதியினை போன்று இருந்தாலும் உடனடியாக புகைப்படங்களை மாற்றம் செய்யாமல் பயனர்களிடம் இருந்து 10 புகைப்படங்களை பெற்று அவற்றினை செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து அழகான மற்றும் கற்பனைக்கு எட்டாத புகைப்படங்களாக மாற்றம் செய்கின்றது. Dreams வசதியினை பெற்றுக்கொள்ள “Memories” பகுதியிற்கு செல்வதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Snapchat
Snapchat

இந்த வசதியானது Snapchat + premium பயனாளர்களுக்கும் non Snapchat + பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதுடன் மாதம் ஒன்றிற்கு எட்டு புகைப்படங்கள் அடங்கிய package ஒன்றினை இலவசமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் மேலதிகமாக பயன்படுத்துவதற்கு 0.99$ இனை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது அத்துடன் Snapchat நிறுவனமானது தொடர்ந்து Dreams வசதியினை மேம்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

Exit mobile version