தொடுதிரைகளுக்கு வாழ்நாள் உத்தரவாதம் அளிக்கும் OnePlus நிறுவனம்…!!!

OnePlus

OnePlus

தொடுதிரைகளுக்கு வாழ்நாள் உத்தரவாதம் அளிக்கும் OnePlus நிறுவனம்…!!!

அனைவரும் ஆசைப்பட்டு வாங்க நினைக்கும் Android தொலைபேசி நிறுவனம் என்றால் அது OnePlus ஆக தான் இருக்கும். கடந்த ஒருவருடங்களாக OnePlus நிறுவனம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றார்கள், திடீர் என்று தொடுதிரையில் ஏற்படும் பச்சைக்கோடு தான் இதற்கான காரணம். OnePlus பயன்படுத்துவோர் பலதடவை முறைப்பாடு செய்தும் OnePlus நிறுவனத்திடம் இருந்து திருப்தியான பதில் எதுவும் வரவில்லை, அத்துடன் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை சொல்லி வந்த நிலையில் கடந்தவாரம் ஒரு அறவிப்பு ஒன்றினை OnePlus நிறுவனம் வெளியிட்டு இருந்தார்கள்.

OnePlus நிறுவன தொலைபேசிகளின் தொடுதிரைகளுக்கு வாழ்நாள் உத்தரவாதம்.

OnePlus நிறுவன தொலைபேசி பயன்படுத்துவர்களுக்கு தொடுதிரையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்பதுடன் இப்போது பாவனையில் இருக்கும் தொலைபேசி திரைகளில் பச்சைக்கோடு இருந்தால் அருகில் இருக்கும் OnePlus நிறுவன முகவரிடம் கொடுத்து புதிய தொலைபேசியினை பெற்றுக்கொள்ள முடியும், சில தொலைபேசிகள் தங்களிடம் கையிருப்பு இல்லை என்பதால் அதற்கான வ்வுச்சரினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அதியுயர் தொகையாக இந்திய மதிப்பில் 25,500.00 ரூபாவினை பெற்றுக்கொள்ள முடியும்

Exit mobile version