1768813 noisefit evolve 3 smartwatch
தொழில்நுட்பம்

அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Share

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்ப்ளே, 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் விண்டேஜ் பிரவுன், கார்பன் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் சில்வர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1768813 noisefit evolve 3 smartwatch

சிறப்பம்சம்

புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466×466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் யுனிபாடி மற்றும் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், சமூக வலைதள நோட்டிபிகேஷ்கள், வேக் ஜெஸ்ட்யுர், ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரை பேக்கப் வழங்குகிறது.

#Smartwatch

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...