டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பீஸ்ஃபுல் புளூ மற்றும் போலார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டெக்னோ பாப் 6 ப்ரோ அம்சங்கள்:
- 6.56 இன்ச் 1600×720 பிக்சல் HD+ வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- IMG பவர்-விஆர் GE-கிளாஸ் GPU
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
- 8MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- இரண்டாவது ஏஐ கேமரா
- 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 4ஜி வோல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
#Smartphone
1 Comment